வெள்ளி, 25 ஜூலை, 2014

discharge certificate என்பது வேறு. discharge summary என்பது வேறு.

மரியாதைக்குரியவர்களே,வணக்கம். பயணிகள் பாதுகாப்பு சங்கம் வலைப்பக்கத்திற்கு தங்களை இனிதே வரவேற்கிறோம்.

discharge certificate என்பது வேறு. discharge summary என்பது வேறு.
discharge summary :
நீங்கள் மருத்துவமனைக்கு  வரும்போது உங்கள் நிலை என்ன

அதை மருத்துவர் எவ்வாறு கணித்தார்
அதற்கு என்ன வைத்தியம் தேவை என்று தீர்மானித்தார்.
என்னென்ன டெஸ்ட்கள் எடுக்க முடிவெடுத்தார் ஏன்
பிறகு உள் நோயாளியாக வைத்துப் பார்க்கவேண்டுமா? அல்லது
புற நோயாளியாகவே வைத்துப் பார்த்தால் போதுமா? ஏன்
ஏதெனும் நோய்க்குறி நிபுணர்களை கலந்து.
ஆலோசிக்கவேண்டுமா?
உள் நோயாளி ஆயின் எவ்வளவு நாட்கள் மருத்துவமனையில் தங்க வே
ண்டும் ?
எவ்வளவு நாட்களுக்கு இந்த சிகிச்சை தொடரவேண்டும்?
என்பன போன்ற விசயங்கள் அடங்கியது தான் டிஸ்சார்ஜ் சம்மெரி
டிஸ்சார்ஜ் சர்டிபிகேட்
இது மேற்கண்ட சிகிச்சைகளை நோயாளிக்கு கொடுத்தேன் .அவர் குணம் அடைந்தார்/ அடையவில்லை . குணம் அடையும் நிலையைத் தாண்டிவிட்டார். ஆகையினால் நாங்கள் டிஸ்சார்ஜ் செய்கிறோம் என்று சொல்வது தான் இந்த சர்டிபிகேட் .
இந்த இரண்டும் இல்லாமல் ஒரு நோயாளி புற /உள் நோயாளி மருத்துவமனையில்  சிகிச்சை பெற்று விலகக் கூடாது/ அனுப்பக்கூடாது .



தகவல் அறியும் உரிமை சட்டத்தின் அடுத்த மாபெரும் வெற்றி: நோயாளிகள் இந்த சட்டப்படி, மற்ற சட்டங்களை போலவே, மருத்துவர்களிடமிருந்து, தங்களது விரிவான சிகிச்சை ரிப்போர்ட் ஐ கேட்கலாம் என்பதே அது. மத்திய தகவல் ஆணையம், மருத்துவமனையின் பொது அதிகார அமைப்புக்கு, நோயாளிகளிகளுக்கும், அவரது உறவினர்களுக்கும் மெடிக்கல் ரெகார்டுகளை அவர்களது privacy மற்றும், ரகசியதன்மையை காக்கவும், ஒரு குறிப்பிட்ட காலத்திற்குள் கொடுக்குமாறு பரிந்துரைத்துள்ளது.
இந்திய அரசியலமைப்பு சட்ட Articles 21 மற்றும் 19 இன் படி, ஒருவர் தனக்கு கொடுக்கப்பட்ட சிகிச்சையின் விரிவான தகவலை பெற உரிமை உண்டு.அதாவது, அவருக்கு என்ன வைத்தியம் செய்யப்பட்டது, அவருக்கு எடுக்கப்பட்ட டெஸ்டுகள்இன் ரிபோர்டுகள், மருத்துவர்கள் மற்றும் நிபுணர்கள் ஆகியோரது முடிவுகள், நோயாளி ஏன் மருத்துவமனையில் வைக்கப்பட்டுள்ளார், இன்ன பிற. மனுதாரர், பொருட்கள், சேவைகள் மற்றும் அவருக்குண்டான மருத்துவ சேவைகள் அனைத்தையும் குறித்து அவர் கேட்கலாம்.
அகில இந்திய மெடிக்கல் கவுன்சில், கடந்த 11.3.2002 இல், ஒரு சுற்றறிக்கை அனுப்பி, மெடிக்கல் ரெக்கார்டுகளை பராமரிக்கவேண்டும் என்றும், நோயாளிகள் அதை தெரிந்து கொள்ள வேண்டும் என்றும் சொல்லி உள்ளது.
நோயாளிகளோ, அனுமதிக்கப்பட்ட உதவியாளர்களோ, சட்ட வல்லுனர்களோ கேட்டால், நோயாளிகளது மருத்துவ குறிப்பை மூன்று நாட்களுக்குள் கொடுக்க வேண்டும் என்று சொல்லி உள்ளது.
கேரளா உயர்நீதிமன்றமும், இதை வலியுறுத்தி உள்ளது. Rajappan Vs. Sree Chitra Tirunal Institute for Medical Science and Technology [ILR2004(2)Kerala150] : Appendix 3 இன் படி, அனைத்து ஆவணங்களோடு, நோயாளி அல்லது சிகிச்சை எடுத்து இறந்தவரின் உறவினர் கேட்டால், அவரது சிகிச்சை குறிப்பேட்டை கொடுக்க வேண்டும்.
தகவல் அறியும் உரிமை சட்டம் பிரிவு 3 இன் படி, நோயாளிக்கு அவரது சிகிச்சை குறிப்பேடு தரப்பட வேண்டும். நோயாளி மருத்துவமனையில் தங்க மறுத்து, சிகிச்சை குறிப்பேட்டை கேட்டால், இந்திய அரசியலமைப்பு சட்டதில் சொல்லப்பட்ட, வாழ்வுரிமை மற்றும் அவரது சுதந்திரத்தின் படி, அவருக்கு உரிமை உண்டு.
தகவல் அறியும் உரிமை சட்டம் பிரிவு, 8 (1)(h) இன் படி, மருத்துவ ஆதாரங்களை கொடுத்தால், புலன் விசாரணையை பாதிக்கும் என்று ஆஸ்பத்திரி நிர்வாகம் பொதுவாக சொல்வதை ஏற்று கொள்ள முடியாது.
The case citation can be read here: Ms.Nisha Priya Bhatia Vs. Institute of HB&AS, GNCTD, File No.CIC/AD/A/2013/001681­SA dated 23­-07­-2014. நன்றி : RTI INDIA
மரியாதைக்குரியவர்களே,
           வணக்கம். பயணிகள் பாதுகாப்பு சங்கம் வலைப்பக்கத்திற்கு தங்களை அன்புடன் வரவேற்கிறோம்.
இதோ
காவல் துறை புகார் தொலைபேசி எண்கள்...!!
1. குற்றம் சார்ந்த புகாருக்கு (Control Room ) ... 100.
2. போக்குவரத்து விதி மீறல்
புகாருக்கு (டிராபிக்) ... 103.

3. குறுஞ்செய்தி (sms ) மூலம்
புகாருக்கு ( சென்னை மாநகர் )... 95000 99100.

4. மருத்தவ சேவை வாகனம் (ambulance ) ... 108.
5. குழந்தைகள் குறித்து உதவிக்கு (Child Line ) ... 1098.
6. பெண்கள் குறித்து உதவிக்கு (Women help Line ) ...
1091.

7. கடலோர பாதுகாப்பு குறித்து உதவிக்கு (Coastal
security help Line ) ... 1093.

8. முதியோர் குறித்து உதவிக்கு (Senior Citizen
Line ) ... 1253.

9. ராக்கிங் கொடுமை புகாருக்கு (Anti-Ragging
Helpline) ... 1800-180-5522 or155222..

முதலமைச்சரின் தனிப்பிரிவுக்கு - பயணி?????

மரியாதைக்குரியவர்களே,
                     வணக்கம்.பயணிகள் பாதுகாப்பு சங்கம் - தமிழ்நாடு வலைப்பக்கத்திற்கு தங்களை அன்புடன் வரவேற்கிறோம்.



          மாண்புமிகு முதலமைச்சர் தனிப்பிரிவுக்கு கடந்த 01/06/2014 ஆம் தேதி அன்று இரவு 8.40மணிக்கு அனுப்பிய புகார் மீது இன்று (25/07/2014) வரை எவ்வித நடவடிக்கையும் எடுக்கப்பட்டதாக மனுதாரருக்கு பதில் அனுப்பவில்லை.
              எனவே தகவல் பெறும் உரிமை சட்டம்-32005ன் படி கீழ்கண்ட கோரிக்கைகளை கேட்டு (ஏற்புச்சான்றுடன் கூடிய பதிவுத்தபால்) 
     நேற்று (24.07.2014) பிரச்சினைக்குரிய சென்னை-சத்தியமங்கலம் வழித்தட  பேருந்து  நிர்வகிக்கும்
         ஈரோடு மண்டலத்தின் தலைமையகத்திற்கு,
 திரு.A.A.இராமசாமி-அவர்கள் தலைவர்,பயணிகள் பாதுகாப்பு சங்கம்,(நுகர்வோர் பாதுகாப்பு மற்றும் சாலை பாதுகாப்பு சங்கம்-தமிழ்நாடு என்ற அரசு பதிவு பெற்ற  தன்னார்வ அமைப்பின் சார்பு சங்கம்) 
        தகவல் பெறும் உரிமை சட்டம்-2005ன் படி 
 தகவல்கோரி விண்ணப்பம் அனுப்பியுள்ளார்..
அதன் விவரம் கீழே தங்களது பார்வைக்கு.........
        


பயணிகளின் பாதுகாப்பற்ற பிரச்சினைகளை தொல்லைகளுக்கு ஆளாக்கப்படும் பிரச்சினைகளை முதலமைச்சரிடம் புகார் செய்தாலும் குற்றவாளிக்கு  சாதகமாக திருப்பி? தண்டனையிலிருந்து   தப்பித்துக் கொள்ளலாம் என்ற நிகழ்வு! ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலத்தில் நிலவி வருவது வேதனைக்குரியது...
அனைவரின் கருத்துக்களும்,முரண்களும்,கண்டனங்களும்,ஆலோசனைகளும் வரவேற்கப்படுகின்றன. பயணிகள் பிரச்சினை சம்பந்தமாக கருத்தரங்கம் அல்லது விவாதக்களம் நடத்தினாலும் நாங்களும் பங்கற்று விவாதிக்க தயார்.போக்குவரத்து கழகம் சார்ந்த அதிகாரிகள் உட்பட பணியாளர்கள் உட்படசமூக ஆர்வலர்கள் அனைவரும்  பங்கேற்று பயணிகளின் பாதுகாப்பிற்கு உத்தரவாதம் கொடுப்பது யார் என்ற விவரம் வெளிப்படுத்த வேண்டும்.தவறுகள் இருப்பின் சுட்டிக்காட்டவும்.சரியான தீர்ப்பு - மக்களின் தீர்ப்பே! என எதிர்பார்க்கும்,
 இப்படிக்கு,
பயணிகள் நலனில் அக்கறையுள்ள,
 நிர்வாகிகள் மற்றும் உறுப்பினர்கள்.
மாநில மையம்,
சத்தியமங்கலம்.
தேதி;25.07.2014 வெள்ளிக்கிழமை.
ஈரோடு மாவட்டம்.

முதலமைச்சர் தனிப் பிரிவும்-பயணி புகாரும்

மரியாதைக்குரியவர்களே,
            வணக்கம்.
                பயணிகள் பாதுகாப்பு சங்கம்.வலைப்பக்கத்திற்கு தங்களை அன்புடன் வரவேற்கிறோம்.
     இரவு நேர நீண்டதூர தனியாள் பெண் பயணியாக ஏற்கனவே முன்பதிவு செய்து பயணிக்கும்போது சென்னை-சத்தி அரசு பேருந்தில் அப்போது பணியிலிருந்த நடத்துநர் மீது முதலமைச்சர் தனிப்பிரிவுக்கு புகார் அனுப்பி அதன் மீது தக்க நடவடிக்கை எடுக்க TRANSPORT - TNSTC,COIMBATORE(CTC) க்கு அனுப்பபட்டுள்ளது. ஆனால் இரண்டு மாதங்களாகியும்  இன்றுவரை (25.07.2014) எவ்வித தகவலும் மனுதாரருக்கோ பயணிக்கோஅனுப்பவில்லை.இதோ முதலமைச்சர் மாண்புமிகு அம்மா அவர்களின் தனிப்பிரிவுக்கு அனுப்பிய புகார் கடிதத்தின் விவரமும் பதிலுரைத்த விவரமும்  தங்களது பார்வைக்காக கீழே........ஆனால் அரசு போக்குவரத்துக்கழகம் - ஈரோடு மண்டலம் நிர்வாகம்   சம்பந்தப்பட்ட பயணியை அல்லது மனுதாரரை விசாரிக்காமலும்,எவ்வித தகவலும் கொடுக்காமலும் விசாரணை முடித்து பதில்  வழங்கி உள்ளது.அதாவது  யார் விசாரித்தார்கள்? என்ன விசாரித்தார்கள்?எதை விசாரித்தார்கள்? யாரை விசாரித்தார்கள்?.எங்கு?,எப்போது விசாரித்தார்கள்? என்றுதான் தெரியவில்லை!.இந்த நடவடிக்கையானது முதலமைச்சரின் தனிப்பிரிவு உத்தரவை அவமதித்த செயலாகும் என்று கருதிய நிலையில் இந்த விவரம் அறிந்த பயணிகளும்,பொதுமக்களும் நம்பிக்கை இழந்து உள்ளனர்.


மாண்புமிகு அம்மா அவர்களுக்கு நுகர்வோர் பாதுகாப்பு மற்றும் சாலை பாதுகாப்பு சங்கம்-தமிழ்நாடு செயலாளர் பணிவுடன் எழுதுவது.X X X X X X X X X X சென்னையிலிருந்து சத்தியமங்கலத்திற்கு (tripcode 2000CHESTMCC020) PNR#U7522670 ROUTE NUMBER 40709 முன்பதிவு செய்து 30-05-2014அன்று இரவில் தனிபயணியாக பயணித்தபோது இருக்கை மாற்றி அமரவைத்து துன்புறுத்தல் கொடுத்த நடத்துனர் மீது நடவடிக்கை எடுத்து அல்லது பொதுவிசாரணை நடத்தி உண்மைநிலை அறிந்து மற்ற பயணிகளுக்காவது பாதுகாப்பு அளிக்குமாறு தாழ்மையுடன் கேட்டுக்கொள்கிறேன்.பெண்கள் துன்புறுத்தலுக்கு ஆளாக்கப்படும்போது புகார் கொடுக்க சம்பந்தப்பட்ட காவல் அதிகாரிகளின் தொடர்பு எண் மற்றும் சம்பந்தப்பட்ட அரசுப்பேருந்து அதிகாரியின் தொடர்பு எண் அனைத்து பயணிகளின் பார்வைக்கு பேருந்தில் தெளிவாக படும்வகையில் எழுதிவைத்து பராமரித்து பாதுகாக்கவும்,பணியிலிருக்கும் நடத்துநர் மற்றும் ஓட்டுநர்களின் கடமையும்,பொறுப்பும் பற்றி தக்க அறிவுரை வழங்கிடவும் ஆவண செய்து உதவுமாறு பணிவுடன் கேட்டுக்கொள்கிறேன்.இப்படிக்கு தங்கள் உண்மையுள்ள பரமேஸ்வரன்.C // தேதி 01 - 06 -2014

கோரிக்கை வகை
COMPLAINTS - OFFICIALS
கோரிக்கை நிலவரம்
Accepted
தொடர்புடைய அலுவலர்
TRANSPORT - TNSTC,COIMBATORE(CTC)
பதில்
REJECTED. The spare bus was operated on that day and the passengers seated in 3,4 and 5 were shifted to the other seats with their permission. But the lady passenger made a complaint to the Conductor that the seat allotted to her is not satisfactory. Two times herself only shifted the vacant seats. Even the Conductor was personally warned the Cell phone conversation with the father of the lady passenger. REF.No3366/D1/Comml[P&D]/Tnstc/ER/2014 2.07.2014.






மாண்புமிகு அம்மா அவர்களுக்கு நுகர்வோர் பாதுகாப்பு மற்றும் சாலை பாதுகாப்பு சங்கம்-தமிழ்நாடு செயலாளர் பணிவுடன் எழுதுவது.  (பாதுகாப்பு காரணங்களுக்காக பாதிப்புக்குள்ளான  பயணி பெயர் நீக்கப்பட்டுள்ளது) சென்னையிலிருந்து சத்தியமங்கலத்திற்கு (tripcode 2000CHESTMCC020) PNR#U7522670 ROUTE NUMBER 40709 முன்பதிவு செய்து 30-05-2014அன்று இரவில் தனிபயணியாக பயணித்தபோது இருக்கை மாற்றி அமரவைத்து துன்புறுத்தல் கொடுத்த நடத்துனர் மீது நடவடிக்கை எடுத்து அல்லது பொதுவிசாரணை நடத்தி உண்மைநிலை அறிந்து மற்ற பயணிகளுக்காவது பாதுகாப்பு அளிக்குமாறு தாழ்மையுடன் கேட்டுக்கொள்கிறேன்.பெண்கள் துன்புறுத்தலுக்கு ஆளாக்கப்படும்போது புகார் கொடுக்க சம்பந்தப்பட்ட காவல் அதிகாரிகளின் தொடர்பு எண் மற்றும் சம்பந்தப்பட்ட அரசுப்பேருந்து அதிகாரியின் தொடர்பு எண் அனைத்து பயணிகளின் பார்வைக்கு பேருந்தில் தெளிவாக படும்வகையில் எழுதிவைத்து பராமரித்து பாதுகாக்கவும்,பணியிலிருக்கும் நடத்துநர் மற்றும் ஓட்டுநர்களின் கடமையும்,பொறுப்பும் பற்றி தக்க அறிவுரை வழங்கிடவும் ஆவண செய்து உதவுமாறு பணிவுடன் கேட்டுக்கொள்கிறேன்.இப்படிக்கு தங்கள் உண்மையுள்ள பரமேஸ்வரன்.C // தேதி 01 - 06 -2014
Grievance Category COMPLAINTS - OFFICIALS Petition Status Forwarded to the concerned officer for necessary action
Concerned Officer TRANSPORT - TNSTC,COIMBATORE(CTC) 

புதன், 23 ஜூலை, 2014

பயணிகள் பாதுகாப்பு சங்கம்-PASSENGERS ASSOCIATION - TAMIL NADU

மரியாதைக்குரியவர்களே,
                      வணக்கம்.''பயணிகள் பாதுகாப்பு சங்கம்'' வலைப்பக்கத்திற்கு தங்களை இனிதே வரவேற்கிறோம்.பயணிகள் பாதுகாப்பு சங்கம் அல்லது PASSENGERS ASSOCIATION - TAMIL NADU  அமைப்பானது அரசு பதிவு பெற்ற நுகர்வோர் பாதுகாப்பு மற்றும் சாலை பாதுகாப்பு சங்கம்-தமிழ்நாடு என்னும் தன்னார்வ அமைப்பின் சார்பு அமைப்பாகும்.

இந்த வலைப்பக்கத்தில் - பயணிகளின் கடமைகளும்,உரிமைகளும் பற்றிய விவரங்கள்,பயணிகள் வாகனங்களும்,அதன் ஓட்டிகளின் பொறுப்புகளும்,கடமைகளும் பற்றிய விவரங்கள்,பயணிகள் வாகன உரிமையாளர்களின் பொறுப்புகளும்,கடமைகளும் பற்றிய விவரங்கள்,மோட்டார் வாகன சட்டப் பிரிவுகளின்படி பயணிகளின் நடத்தைவிதிகள்,நடத்துநர்களின் நடத்தை விதிகள்,ஓட்டுநர்களின் நடத்தை விதிகள்,என பயணிகள் போக்குவரத்து சம்பந்தமான அனைத்து விவரங்களும் அனைவரும் அறியும் வண்ணம் பதிவிட்டு வெளியிடப்படும்.


திங்கள், 21 ஜூலை, 2014

சத்தியமங்கலத்தில் கண் தான விழிப்புணர்வு முகாம் -

சத்தியமங்கலம்,காமதேனு கலை அறிவியல் கல்லூரியில் கண் தான விழிப்புணர்வு முகாம்.



 சிவகாசி பட்டாஸ் நகர் அரிமா சங்கமும்,சத்தியமங்கலம் நுகர்வோர் பாதுகாப்பு மற்றும் சாலை பாதுகாப்பு சங்கம்-தமிழ்நாடும் இணைந்து காமதேனு கலை அறிவியல் கல்லூரியில் வைத்து21.7.2014அன்று காலை கண் தான விழிப்புணர்வு முகாம் நடத்தினார்கள்.
         இந்த முகாமிற்கு கல்லூரியின் செயலாளர் திருமதி P.அருந்ததி அவர்கள் குத்துவிளக்கு ஏற்றி  துவங்கி வைத்தார்.கல்லூரியின் தாளாளர் திரு.R.பெருமாள்சாமி அய்யா அவர்கள் தலைமை தாங்கினார்கள்.கல்லூரியின் மாணவி செல்வி.A.ரோகிணி அவர்கள் வரவேற்புரை வழங்கினார்.KGR மருத்துவமனை Dr.K.G.ரங்கநாதன் அவர்களும்,கல்லூரியின் முதல்வர் திரு.K.செந்தில்குமார் அவர்களும்,நுகர்வோர் பாதுகாப்பு மற்றும் சாலை பாதுகாப்பு சங்கத்தின் செயலாளர். திரு.C.பரமேஸ்வரன் அவர்களும்,ஒருங்கிணைப்பாளர் Lion.K.லோகநாதன் அவர்களும்,தலைவர் திரு.A.A.இராமசாமி அவர்களும்,கல்லூரியின் இணை செயலாளர் திருமதி.P.மலர் செல்வி அவர்களும்,சிவகாசி பட்டாஸ் நகர் அரிமா சங்கத்தின் தலைவர் அரிமா.K.ராஜ்குமார் அவர்களும்,செயலாளர் அரிமா.A.உலகராஜ் அவர்களும்,பொருளாளர் அரிமா,V.ஞானஸ்கந்தப்பன் அவர்களும் முன்னிலை வகித்தார்கள்.
                 சிவகாசி அரிமா சங்க பட்டய தலைவரும்,கண் தான மாவட்ட தலைவருமான  அரிமாDr.J.கணேஷ் MJF அவர்கள் சிறப்பு விருந்தினராக கலந்துகொண்டு கண்தானத்தின் அவசியம் மற்றும் நன்மைகள் குறித்து சிறப்புரை ஆற்றினார்.கண் தானம் பற்றிய குறும்படம் திரையிட்டு காண்பிக்கப்பட்டது.கண் தான விழிப்புணர்வு துண்டு பிரசுரங்களும்,ஸ்டிக்கர்களும் விநியோகிக்கப்பட்டன.

            கண்தான மாவட்ட தலைவர் அரிமாDr.J.கணேஷ் MJF அவர்கள் கூறுகையில் அகத்துக்கு அழகு அளிப்பவை மட்டுமல்ல கண்கள் உலகத்தை நாம் காண உதவும் அற்புத உறுப்பு.கண்கள் இல்லாத வாழ்க்கை ஓர் இருண்ட உலகம்.இத்தகைய இருண்ட உலகத்தில் வாழ்பவர்களுக்கு ஒளிவிளக்காக  கிடைத்ததுதான் கண் தானம்.மனிதர்களுக்கு மரணம் உண்டு.ஆனால் கண்களுக்கு மரணம் இல்லை.எனவே மரணத்திற்குப்பிறகுஅனைவரும் கண் தானம் செய்யலாம்.கண்ணின் கருவிழியின் பாதிப்பால் ஏறக்குறைய 68லட்சம் இந்தியர் முற்றிலும் கண்ணொளி இழந்துள்ளனர்.மறைந்தவர் தானமாக கொடுக்கும் கண்களை கொண்டுஇவர்களில் பெரும்பாலானோர் வாழ்வில் ஒளியேற்ற முடியும்.ஆனால் நாம் ஆண்டுதோறும் பெறும் கண் கருவிழிகளோ  சில ஆயிரங்களே.சமுதாயத்தில் தொடர்ந்து விழிப்புணர்வை அதிகரிப்பதின் மூலம் இத்தகைய கண்தான சேவையை பன்மடங்கு உயர்த்த முடியும் என்றார்.


            கண்தான விழிப்புணர்வு பற்றிய கேள்விகளுக்கு பதில் அளித்த மாணவ,மாணவிகளுக்கு சிறப்பு பரிசுகள் வழங்கப்பட்டன.காமதேனு கலை அறிவியல் கல்லூரியின் மாணவ,மாணவியர் மற்றும் நுகர்வோர் பாதுகாப்பு மற்றும் சாலை பாதுகாப்பு சங்கம்-தமிழ்நாடு அமைப்பின் உறுப்பினர்களும்,ஊர் பொதுமக்களும் கலந்துகொண்டு சிறப்பித்தனர்.முகாமில் பங்கு பெற்ற மாணவ,மாணவிகளுக்கு நோட்டீஸ்கள் வழங்கப்பட்டன.முகாமின்போது தேசிய கண்ணொளி விழிப்புணர்வு இயக்கம்,பயணிகள் பாதுகாப்பு சங்கம் ஆகிய சமுக நலனுக்கான அமைப்புகள் துவங்கப்பட்டன.


             அரிமா Dr.J. கணேஷ்MJF அவர்களுக்கு '' தேசிய கண்ணொளி விழிப்புணர்வு இயக்கம்'' சார்பாக ''கண்தான வழிகாட்டி - விருது'' வழங்கி கௌரவிக்கப்பட்டது.
முகாமிற்கான ஏற்பாடுகளை காமதேனு கலை அறிவியல் கல்லூரி மாணவ,மாணவியர் சிறப்பாக செய்து இருந்தனர்.கல்லூரியின் மாணவி செல்வி.J.பெனசிர் ரிஸ்வானா அவர்கள் நன்றி கூற முகாம் இனிதே நிறைவடைந்தது.

மாலை 3.30 மணியளவில் ''பார்வைக்கோர் பயணம்'' கண் தான விழிப்புணர்வு பேரணி நடைபெற்றது.பேரணியில் தேசிய கண்ணொளி விழிப்புணர்வு இயக்கமும்,நாட்டு நலப்பணித் திட்ட மாணவ,மாணவியரும் கலந்து கொண்டனர்.பேரணியை சத்தியமங்கலம் காவல் ஆய்வாளர் (சட்டம்& ஒழுங்கு)அவர்கள் மற்றும் போக்குவரத்து ஆய்வாளர் அவர்கள் மற்றும் அரிமா.K.லோகநாதன் அவர்கள் துவக்கி வைத்தனர்.பேரணி சத்தியமங்கலம் அரசு ஆண்கள் மேல்நிலை பள்ளி முன்பு துவங்கி சத்தியமங்கலம் பேருந்து நிலையம் முன்பு நிறைவடைந்தது.

ஞாயிறு, 20 ஜூலை, 2014

புத்தகம் உருவான வரலாறு

மரியாதைக்குரியவர்களே,
 வணக்கம்.பயணிகள் பாதுகாப்பு சங்கம் வலைப்பக்கத்திற்கு தங்களை அன்புடன் வரவேற்கிறோம்.
 
புத்தகம் உருவான வரலாறு
நாம் படிக்கும், “புத்தகம்” என்ற இந்த வடிவம் பெற்றது பண்டைக் காலத்தின் பிற்பகுதியில்தான். இதற்கு முன் பாபிரஸ் (Papyrus) ரோல்களில்தான் எழுதப்பட்டு வந்தது. இது மிகவும் நீண்ட அளவிலான ரோல்களாகவும் இருந்தது. ரோமானியர்கள் இதனை வால்யுமின் (Valumen) என்றழைத்தனர். இதுவே பிறகு நாம் இன்று உபயோகிக்கும் வால்யூம் (Valume) என்ற பெயர் வரக் காரணமாக அமைந்தது.
பிறகு ஐந்தாம் நூற்றாண்டின் மத்தியில் பாபிரஸ் ஆனது, பார்ச்மண்ட் ( Parchment ) மற்றும் வில்லேம் ( Vellum ) என்ற வகைகளின் வரவால் மறைந்து விட்டது. பார்ச்மெண்ட் என்பது செம்மறி ஆட்டின் தோலினால் செய்யப்பட்டது ஆகும். வில்லேம் என்பது கன்றுக்குட்டியின் தோலினால் செய்யப்பட்டது ஆகும். இவைகளில் ஒரு பக்கம் மட்டும் எழுதுவதற்குப் பயன்படுத்தி அதனை சரியாகக் கத்தரித்துச் சம அளவில் வைத்து ஒரு பக்கம் “பைண்டிங்” செய்து வைத்தனர். இதுவே (தைத்து) புத்தகம் வடிவம் பெறச் செய்த முதல் முயற்சியாகும்.
மேலும், தோலினால் செய்யப்பட்ட துண்டுகளை மடித்து ஒவ்வொன்றும் இரண்டு பகுதிகளாக மடித்து வரும்படி செய்தனர். இப்படி நான்கு துண்டுகளை மடித்து ஒன்றனுள் ஒன்றாக வைத்து எட்டுப் பக்கங்களாக மாற்றினார். இதற்கு “செக்சன்” என்றும் பெயரிட்டனர். இப்படி எழுதப்பட்ட எட்டுப் பக்கங்கள் கொண்ட செக்சன்கள் அனைத்தையும் சரியாக ஒன்றன் மீது ஒன்று வைத்துப் பைண்டிங் செய்தனர். அதாவது இதனுடைய முதுகுப் பக்கத்தில் துளையிட்டு நூலினால் தைக்கப்பட்டுத் தோலினால் ஆன அட்டையிட்டு வடிவமைத்தனர். பிறகு இதில் பல மாற்றங்கள் செய்து அழகுப் படுத்திப் பத்திரப்படுத்தி வந்தனர்.
இதுதான் புத்தகம் உருவான வரலாறு ஆகும். பிறகு பைபிள், சட்டம், சரித்திரம் மற்றும் மதப் புத்தகங்கள் ஆகிய பலதரப்பட்ட புத்தகங்கள் வெளி வந்தன.

அவசர உதவிக்கான போன் நெம்பர்கள்

மரியாதைக்குரியவர்களே,
            வணக்கம். பயணிகள் பாதுகாப்பு சங்கம் வலைப்பக்கத்திற்கு தங்களை இனிதே வரவேற்கிறோம்.


நம் மொபைல் போனில் கண்டிப்பாக சேமித்து வைத்திருக்க எண்கள் !
1.அவசர உதவி அனைத்திற்கும்————–911
2.வங்கித் திருட்டு உதவிக்கு ——————9840814100
3.மனிதஉரிமைகள் ஆணையம் ————–044-22410377
4.மாநகரபேருந்தில அத்துமீறல்————–09383337639
5.போலீஸ் SMS :- ———————————-9500099100
6.போலீஸ் மீது ஊழல் புகாருக்கு SMS :——9840983832
7.போக்குவரத்து விதிமீறல் SMS : ————-98400 00103
8.போலீஸ் : —————————————–100
9.தீயணைப்புத்துறை :—————————-101
10.போக்குவரத்துவிதிமீறல——————–103

11.விபத்து :——————————————–100, 103
12.ஆம்புலன்ஸ் : ———————————–102, 108
13.பெண்களுக்கானஅவசர உதவி : ———–1091
14.குழந்தைகளுக்கான அவசர உதவி :——–1098
15.அவசர காலம் மற்றும் விபத்து : ————1099
16.முதியோர்களுக்கான அவசர உதவி:——1253
17.தேசியநெடுஞ்சாலையில் அவசர உதவி:1033
18.கடலோர பகுதி அவசர உதவி : ————-1093
19.ரத்த வங்கி அவசர உதவி : ——————-1910
20.கண் வங்கி அவசர உதவி : ——————-1919
21.விலங்குகள் பாதுகாப்பு ————————044 -22354959  /  22300666
22.நமது அலைபேசியில் 911 என்ற எண் மட்டும் எந்த நிலையிலும் எப்போதுமே, எல்லா மாநிலம், எல்லா தேசத்திலும் இயங்கும்.நமது அலைபேசி லாக்கில் இருந்தாலும் இந்த எண்கள் மட்டும் இயங்கும்.

இது அனைத்திற்குமான அவசர உதவி எண்.

புதன், 9 ஜூலை, 2014

பயணிகள் பாதுகாப்பு சங்கம்-தமிழ்நாடு

மரியாதைக்குரியவர்களே,
               வணக்கம்.

பேருந்தில் பயணிகளுக்கு உரிமைகளையும்,பாதுகாப்பினையும் மீட்டெடுக்கும் விதமாக பேருந்து பயணிகள் பாதுகாப்பு சங்கம் வருகிற 21-ஜூலை 2014அன்று நுகர்வோர் பாதுகாப்பு மற்றும் சாலை பாதுகாப்பு சங்கம்-தமிழ்நாடு அரசு பதிவு பெற்ற தன்னார்வ அமைப்பின் சார்பு இயக்கமாக துவங்க உள்ளோம்.என்பதை அனைவருக்கும் தெரிவித்துக் கொள்கிறோம்.பயணிகள் மட்டுமின்றி பொதுமக்கள் அனைவரும் இணைந்து செயல்படலாம்.உரிமைகளை கேட்கலாம்.குறைகளை,தவறுகளை சுட்டிக்காட்டலாம்.ஆலோசனை கொடுக்கலாம்.மாதந்தோறும் கருத்தரங்கு நடத்தலாம்.விவாதம் நடத்தலாம்.பிரச்சாரம் செய்யலாம்.வாங்க அனைவரும் இணைவோம் பயணிகள் பாதுகாப்பு சங்கம் -தமிழ்நாடு இயக்கத்தில்.......
பதிவிட்ட தேதி 9ஜூலை மாதம் 2014 மாலை 5.16மணி புதன்கிழமை.