வெள்ளி, 25 ஜூலை, 2014

முதலமைச்சரின் தனிப்பிரிவுக்கு - பயணி?????

மரியாதைக்குரியவர்களே,
                     வணக்கம்.பயணிகள் பாதுகாப்பு சங்கம் - தமிழ்நாடு வலைப்பக்கத்திற்கு தங்களை அன்புடன் வரவேற்கிறோம்.



          மாண்புமிகு முதலமைச்சர் தனிப்பிரிவுக்கு கடந்த 01/06/2014 ஆம் தேதி அன்று இரவு 8.40மணிக்கு அனுப்பிய புகார் மீது இன்று (25/07/2014) வரை எவ்வித நடவடிக்கையும் எடுக்கப்பட்டதாக மனுதாரருக்கு பதில் அனுப்பவில்லை.
              எனவே தகவல் பெறும் உரிமை சட்டம்-32005ன் படி கீழ்கண்ட கோரிக்கைகளை கேட்டு (ஏற்புச்சான்றுடன் கூடிய பதிவுத்தபால்) 
     நேற்று (24.07.2014) பிரச்சினைக்குரிய சென்னை-சத்தியமங்கலம் வழித்தட  பேருந்து  நிர்வகிக்கும்
         ஈரோடு மண்டலத்தின் தலைமையகத்திற்கு,
 திரு.A.A.இராமசாமி-அவர்கள் தலைவர்,பயணிகள் பாதுகாப்பு சங்கம்,(நுகர்வோர் பாதுகாப்பு மற்றும் சாலை பாதுகாப்பு சங்கம்-தமிழ்நாடு என்ற அரசு பதிவு பெற்ற  தன்னார்வ அமைப்பின் சார்பு சங்கம்) 
        தகவல் பெறும் உரிமை சட்டம்-2005ன் படி 
 தகவல்கோரி விண்ணப்பம் அனுப்பியுள்ளார்..
அதன் விவரம் கீழே தங்களது பார்வைக்கு.........
        


பயணிகளின் பாதுகாப்பற்ற பிரச்சினைகளை தொல்லைகளுக்கு ஆளாக்கப்படும் பிரச்சினைகளை முதலமைச்சரிடம் புகார் செய்தாலும் குற்றவாளிக்கு  சாதகமாக திருப்பி? தண்டனையிலிருந்து   தப்பித்துக் கொள்ளலாம் என்ற நிகழ்வு! ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலத்தில் நிலவி வருவது வேதனைக்குரியது...
அனைவரின் கருத்துக்களும்,முரண்களும்,கண்டனங்களும்,ஆலோசனைகளும் வரவேற்கப்படுகின்றன. பயணிகள் பிரச்சினை சம்பந்தமாக கருத்தரங்கம் அல்லது விவாதக்களம் நடத்தினாலும் நாங்களும் பங்கற்று விவாதிக்க தயார்.போக்குவரத்து கழகம் சார்ந்த அதிகாரிகள் உட்பட பணியாளர்கள் உட்படசமூக ஆர்வலர்கள் அனைவரும்  பங்கேற்று பயணிகளின் பாதுகாப்பிற்கு உத்தரவாதம் கொடுப்பது யார் என்ற விவரம் வெளிப்படுத்த வேண்டும்.தவறுகள் இருப்பின் சுட்டிக்காட்டவும்.சரியான தீர்ப்பு - மக்களின் தீர்ப்பே! என எதிர்பார்க்கும்,
 இப்படிக்கு,
பயணிகள் நலனில் அக்கறையுள்ள,
 நிர்வாகிகள் மற்றும் உறுப்பினர்கள்.
மாநில மையம்,
சத்தியமங்கலம்.
தேதி;25.07.2014 வெள்ளிக்கிழமை.
ஈரோடு மாவட்டம்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக