திங்கள், 14 அக்டோபர், 2013

இளையோரே -உடல் நலம் காப்பீர்!.

மரியாதைக்குரியவர்களே,
            வணக்கம்.''இளைய சமுதாயம்''வலைப்பக்கத்திற்கு தங்களை இனிதே வரவேற்கிறேன்.இன்றைய இளைய சமுதாயம் நாகரீகம் என்ற போர்வையில் ,மாயையில் சிக்கி தவிக்கின்றன.வாழ்க்கை முறைப்படுத்துதல் இன்றி தடுமாறுகின்றன.தடம் மாறுகின்றன.இந்நிலை நீடித்தால் நமது  பெயரைக்கூற சமூகம் இன்றி மனித இனமே அழியும் அபாயம் உள்ளது.
          குறிப்பாக போதை பொருட்களுக்கு ஆட்பட்டு மிக மோசமான சூழ்நிலையில் மனதையும்,உடலையும்,அறிவையும் கெடுத்து வருகின்றனர்.
  ''சுவர் இருந்தால்தாங்க சித்திரம் வரைய முடியும்'' என்பதை நினைவில் வைத்துக்கொண்டு உடல் ஆரோக்கியத்திற்கு முக்கியம் கொடுக்க வேண்டும்.உடலையும்,மனதையும்,அறிவையும் கெடுக்கும் பழக்கங்களை விட்டு ஒழிக்க வேண்டும்.
     விட்டமின்கள்,நார்ச்சத்துக்கள்,தாதுச்சத்துக்கள்,புரதம்,மாவுச்சத்துக்கள், அடங்கிய உணவுகளை சராசரியாக தினசரி உண்ண வேண்டும்.புத்துணர்ச்சி தரும் பழவகைகள்,காய்கறிகள்,முளை கட்டிய தானியங்கள்,காய்கறி சூப்,பச்சடிகள்,கீரைகள்,தேன்,பேரீச்சை,இளநீர்,மோர்,பால்,ஊறவைத்த பருப்பு வகைகள்,போன்றவற்றை உண்ண வேண்டும்.
   நினைவாற்றலை அதிகரிக்ககீரைகள்,வெண்டை,கேரட் அடிக்கடி உணவில் சேர்த்துக்கொள்ள வேண்டும்.இளம்பெண்கள் தினசரி ஒரு கைப்பிடி பயறு அல்லது பருப்பு வகைகளை உணவில் சேர்த்துக்கொள்ள வேண்டும்.சரிவிகித உணவு ஒருநாளைக்கு தேவையான விவரம்;-(1)தானியங்கள் அரிசி,கோதுமை,ராகி,கம்பு,சோளம் 250கிராம் முதல் 400கிராம் வரை.
 (2)புரத உணவு (அ)பருப்பு,கொட்டைகள்,எண்ணெய் வித்துக்கள் 75கிராம் முதல்150கிராம் வரை.(ஆ)பால்,பால்பொருட்கள், 200கிராம் முதல் 800கிராம் வரை.(இ)முட்டை ஒன்று,(ஈ)மீன்,கோழி இறைச்சி 100கிராம் முதல் 200கிராம் வரை.
(3)வைட்டமின் "C" நிறைந்த காய்கறிகள்
  நெல்லிக்கனி,கொய்யா ,முருங்கை,ஆரஞ்சு,பப்பாளி 50கிராம் முதல் 70கிராம் வரை.
(4)பச்சை,மஞ்சள் காய்கறிகள்,
  கீரைகள்,ஆரஞ்சு மஞ்சள் நிறம் கொண்ட காய்கறிகள்,கனிகள் 50கிராம் முதல்70கிராம் வரை.
(5)இதர காய்கறிகள்
  கனிகளாகும்காய்கறிகள்,பீன்ஸ்,பட்டாணி,வாழை,திராட்சை,
ஆப்பிள்,உருளைக்கிழங்கு,
வெங்காயம் தினசரி50 கிராம் முதல் 150கிராம் வரை.
(6)எண்ணெய்,வெண்ணெய்,வனஸ்பதி,நெய் போன்றவை 5கிராம் முதல்50 கிராம் வரை.
(7)சர்க்கரை,இனிப்புகள் தினசரி 5கிராம் முதல்50கிரம் வரை. 
நினைவாற்றல் அதிகரிக்க,
  பாஸ்பரஸ்,குளுட்டாமிக் அமிலம் உள்ள உணவுப்பொருட்களை சாப்பிட்டு வர வேண்டும்.
  கோதுமை,சோளம்,பார்லி,காராமணி,பாசிப்பருப்பு,சோயாபீன்ஸ்,கேரட்,
தண்டுக்கீரை,பீட்ரூட்,முருங்கை,வெங்காயம்,வெள்ளைப்பூண்டு,
புதினாக்கீரை,பொட்டுக்கடலை,தேங்காய் ஆகியவற்றில் பாஸ்பரஸ் உப்பு அதிகமாக உள்ளது.
   ஆப்பிள்,பேரீச்சை,திராட்சை,மாதுளை,ஆரஞ்சு,சாப்பிட்டுவந்தால் நினைவாற்றல் அதிகரிக்கும்.
  வல்லாரைக்கீரை,ரோஸ்மேரி,பிரமிப்பூட்டி,சாகி ஆகிய மூலிகைகளை காயவைத்து பொடியாகவோ,தேநீராகவோ உட்கொள்ளவும்.

    இரும்புச்சத்துள்ள உணவுகள்
         கீரைகள்,சுண்டைக்காய்,பாகற்காய்,எள்,வெல்லம்,முட்டை,இறைச்சி,
தானிய வகைகள்,கொட்டைகள்,பேரீச்சம்பழம்,ஆட்டுஈரல்.
 புரத சத்துள்ள உணவு வகைகள்,
  பச்சைக்காய்கறிகள்,பால்,பால் பொருட்கள்,இறைச்சி,மீன்,பருப்பு வகைகள்,கடலை,தானியங்கள்.
கால்சியம் அல்லது சுண்ணாம்புச்சத்துள்ள உணவு வகைகள்,
 பால் மற்றும் பால் பொருட்கள்,எள்,முட்டை,காலிஃபிளவர்,உலர்ந்த பழங்கள்,பச்சைக்காய்கறிகள்,ஆரஞ்சு....

                                                வைட்டமின்கள்,
  வைட்டமின் A-
        பால்,வெண்ணெய்,முட்டை,கேரட்,பப்பாளி,கீரைகள்,மீன்,மாம்பழம்.
வைட்டமின் B - 
         அரிசி,கோதுமை,பருப்பு,இறைச்சி.
வைட்டமின் C
        எலுமிச்சை,கொய்யா,நெல்லி,ஆரஞ்சு,தக்காளி,முருங்கை,முள்ளங்கி,
உருளைக்கிழங்கு, காலிஃபிளவர்,கொத்தமல்லி.
வைட்டமின் D-
        சூரிய ஒளி,வெண்ணெய்,பாலடைக்கட்டி,மீன்,முட்டை,ஈரல்.

       சமுதாய நலனில் அக்கறையுள்ள 
          உங்கள் ஓட்டுனர்,
         பரமேஸ்வரன்.சி,
          தாளவாடி-
            ஈரோடு மாவட்டம்.
             http://konguthendral.blogspot.com

 
 

இளையோரே,படிப்பு என்பது என்னங்க?

மரியாதைக்குரியவர்களே,
                   வணக்கம்.
                             ''இளைய சமுதாயம்''வலைப்பக்கத்திற்கு தங்களை இனிதே வரவேற்கிறேன். படிப்பு என்பது என்னங்க?படிப்பு என்பது படிக்கும்போதே வேலைக்கான திறன்களையும் வளர்த்துக்கொள்ள வேண்டும் என்பதே! என்படை உணர்வீர்.
               படிப்பு என்பது நாம் வகுப்பறையில் கற்றுக்கொள்ள வேண்டிய விசயங்கள் மற்றும் பாடங்கள் ஒருவகை.அடுத்து வகுப்பைத்தாண்டி நம் கட்டுப்பாட்டில் உள்ள விசயங்களை முறைப்படுத்திக்கொள்வது இன்னொரு வகை.அதாவது போதை பொருட்களின் தீமைகளை அறிந்து அவற்றை தவிர்ப்பது.தனி மனித ஒழுக்கம் பற்றி உணர்வது,கலாச்சார சீரழிவு என்றால் என்ன ?என்பதனையும் அறிந்து அதற்கேற்ப நம் பண்பாட்டை காப்பது.பொது அறிவை வளர்க்க நூலகம் செல்வது.நூல்களை படிப்பது.வாசிக்கும் திறன்களை மேம்படுத்துவது.
                      படிப்பு என்பது மனதை ஒருமுகப்படுத்தும்,நினைவுத்திறனை அதிகரிக்கும்.அறிவையும்-கற்பனையையும் வளர்க்கும்.புதிய புதிய அர்த்தங்களை தந்து கொண்டே இருக்கும்.பட்டம் பதவி என்று இல்லாமல் பிரச்சினைகளை எதிர்கொள்வதற்கும் சமாளிப்பதற்கும் படிக்க வேண்டும்.ஒன்றை ஏற்க அல்லது ஒதுக்க,விவாதித்து பேச,உலகை புரிந்துகொள்ள,மற்றவர்களுக்கு எடுத்து சொல்ல,அரிய பல தகவல்களை தெரிந்துகொள்ள,வாழ்க்கை முன்னேற்றத்திற்கான அனுபவங்கள்,அறிவியல் உண்மைகள்,நல்ல சிந்தனைகள்,தெரிந்து கொள்ள படிக்க வேண்டும்.
                      படிப்பிலும் இரண்டு வகை உள்ளன.ஒன்று ஆழ்ந்த படிப்பு இவ்வகை படிப்பு அன்றைய வருடத்தின் பொதுத்தேர்வுக்கு தேர்ச்சி பெற படிப்பது.(நன்கு மனப்பாடம் செய்வது) .மற்றொன்று அகன்ற படிப்பு இவ்வகை போட்டித்தேர்வு,பொது அறிவை வளர்க்க,உலக விசயங்களை நடப்பு நிகழ்வுகளை தெரிந்துகொள்ள நாளிதழ்கள்,மாத இதழ்கள்,புத்தகங்கள்,நாவல்கள் படிப்பது ஆகும்.
                ஒவ்வொருவரும் ஆண்டு ஒன்றிற்கு சராசரியாக இரண்டாயிரம் பக்கங்கள் படிக்க வேண்டும். என்று ''பன்னாட்டு அறிவியல் பண்பாட்டுக்கழகம்''பரிந்துரை செய்கிறது.ஆனால் நாம் ஆண்டு ஒன்றிற்கு முப்பது பக்கங்கள் மட்டுமே படிக்கிறோம் என''யுனஸ்கோ'' புள்ளிவிவரம் தெரிவிக்கிறது. 
                           எனவே நாம் தினசரி ஆறு பக்கங்களாவது -நாளிதழ்கள்,வார இதழ்,மாத இதழ்,முப்பருவ இதழ்,ஆண்டு இதழ்,நாவல்கள்,பொது அறிவு புத்தகங்கள்,கல்வி சார்ந்த வெளியீடுகள் என படிக்க முயற்சி எடுக்க வேண்டும்.புதிய தகவல்களையும்,சமுதாய மாற்றங்கள்,தொழில்நுட்ப வளர்ச்சி,நாட்டு நடப்பு போன்றவற்றையும் அறியும் விதத்தில் கற்கும் ஆற்றலை தொடர்ந்து மேம்படுத்திக்கொள்ள வேண்டும்.
                   மாற்றம் நிறைந்த உலகில் திறன்பட செயலாற்ற தொடர்ந்து படிக்க வேண்டும்.வேகமாக படிக்கவும்,விரைவாக எழுதவும் பழகிக்கொள்ளவும் வேண்டும்.பர்ஷனாலிட்டி டெவலப்மென்ட்,ஹெல்த் அண்ட் நியூட்ரிஷியன் உட்பட பல விசயங்களை தெரிந்து கொள்ள வேண்டும்.
                      சகிப்புத்தன்மை,பொறுமை,விட்டுக்கொடுக்கும் மனப்பான்மை,,இடத்தோடு ஒன்றிப்போதல்,பணிவு,விடாமுயற்சி ஆகியவனவற்றையும் பழக்கப்படுத்திக்கொள்ள வேண்டும்.
 என்றும் சமூக நலனில் அக்கறையுள்ள
  உங்கள் ஓட்டுனர்
 பரமேஸ்வரன்.C
 தாளவாடி,
 ஈரோடு மாவட்டம்.
    http://konguthendral.blogspot.com

இளைய சமுதாயம்-நேரம் நிர்வகித்தல் தேவை.

மரியாதைக்குரியவர்களே,
          வணக்கம்.
                 ''இளைய சமுதாயம்'' வலைப்பக்கத்திற்கு தங்களை இனிதே வரவேற்கிறேன். இன்றைய சூழ்நிலையில் நேரம் நிர்வகிக்க கற்றுக்கொள்ள வேண்டும்.பழக்கப்படுத்திக்கொள்ள வேண்டும்.உலகிலுள்ள மனிதர்கள் அனைவருக்கும் நேரம் பொதுவானதே.அதாவது ஒரு நாளைக்கு இருபத்திநான்கு மணித்துளிகள்.இதனை முழுமையாக பிரித்து பயன்படுத்திக்கொள்ள பழகிக்கொள்ள வேண்டும்.
                   உதாரணமாக (1)தூங்க,(2)காலைக்கடன்களை முடிக்க,(3)உணவு உட்கொள்ள,(4)தமது பணியினை செய்ய(படிப்பு அல்லது வேலை அல்லது தொழில் போன்ற பணிகளை செய்ய),(5)தன்னை மேம்படுத்திக்கொள்ள,(6) பொழுதுபோக்கு,(7)போக்குவரத்து,(8)புத்தகம் வாசிக்க,(9)ஓய்வு எனத்திட்டமிட்டு ஒருநாளைய நேரத்தை பிரித்துக்கொள்ள வேண்டும்.அதனை சரியாக பயன்படுத்திக்கொள்ளவும் கற்றுக்கொண்டால் வாழ்க்கை நம் வசமே!.இதில் எள்ளளவும் சந்தேகமே இல்லைங்க..
                          கடந்த கால நிகழ்ச்சிகளை மணித்துளிவாரியாக எண்ணிப்பார்த்து நினைவுக்கு கொண்டுவர வேண்டும்.இதனால் ஒருமுனைப்படுத்துதல் ஆற்றலை வளர்ப்பதோடு மற்றவர்கள் கேள்விக்கு நாம் என்ன பதில் கூறினோம்? எந்த இடத்தில் உணர்ச்சிவசப்பட்டு மற்றவர் வெறுக்கும் வகையில் தவறாக நடந்துகொண்டோம்?.நமது செயல்கள் எந்த இடத்தில் தவறுகள் இருந்தன?.தேவையானதா?தேவையில்லாததா?என நமது செயல்களை அறிந்து கொள்ளவும்,நமது செயல்களையும்,எண்ணங்களையும் பரிசீலனை செய்து தவறு இருந்தால் திருத்திக்கொள்ளவும் முடியும்.பேச்சுத்திறமையும்,நேரந்தவறாமையும் பழக்கப்படுத்திக்கொள்ளவேண்டும்.சுருங்கச்சொல்லி எளிதில் புரிய வைக்க வேண்டும்.இந்தப்பழக்கம் நம் வாழ்வில் பெரும் பயனை அளிக்கும்.
  என்றும் சமூக நலனில் அக்கறையுள்ள
  உங்கள் ஓட்டுனர்
 பரமேஸ்வரன்.C,
 தாளவாடி,   
ஈரோடு மாவட்டம்.
             http://konguthendral.blogspot.com

இளையோரே ''உயர்வே குறிக்கோள்'' உணர்வீர்.

மரியாதைக்குரியவர்களே,
               வணக்கம்.''இளைய சமுதாயம்''வலைப்பக்கத்திற்கு தங்களை இனிதே வரவேற்கிறேன்.நாம் பேருந்தில் பயணம் செய்வதற்குக்கூட செல்லும் இடம் தெரிந்து இருக்க வேண்டும்.இல்லையேல் பேருந்தை விட்டு இறக்கிவிடப்படுவோம்.(அதாவது பயணம் செய்வது குறிக்கோள் என்றால்,செல்லும் இடம் இலக்கு ஆகும்.) எனவே வாழ்க்கைப்பயணத்திலும் குறிக்கோள் பற்றி தெரிந்து இருக்க வேண்டும். குறிக்கோள் இல்லாத வாழ்க்கை பயன்றற வாழ்க்கை ஆகும்.துடுப்பு இல்லாத படகில் பயணம் செய்யலாமா?எங்கே போய்க்கொண்டிருக்கிறோம் என்பதை அறிந்துகொண்டால் சேர வேண்டிய இடத்திற்கு விரைவாக செல்ல முடியும்.அதனால் குறிக்கோளும் பொதுவானதாக இருக்காமல் குறிப்பானதாக இருக்க வேண்டும்.நமது குறிக்கோளுக்கு தகுந்த சூழ்நிலை இல்லையென்றால் நாமே உருவாக்கிக்கொள்ள வேண்டும்.நமது குறிக்கோளுக்கு முதல் எதிரி முடியுமா?முடியாதா?என்ற தடுமாற்றமும் குழப்பமும்தான்.எனவே மனநிலையை தடுமாறாமல் ஒருநிலைப்படுத்திக்கள்ள வேண்டும்.சரியான பயிற்சியின் மூலம்தான் நினைவில் வைத்துக்கொள்ள முடியும்.சிறு குறிப்பேடு ஒன்று கையில் வைத்துக்கொண்டு தினசரிக்குறிப்பை எடுக்கக்கற்றுக்கொள்ள வேண்டும். குறிப்பெடுத்துக்கற்றல் மூலம் எளிதாக நினைவில்  வைத்துக்கொள்ள முடியும்.ஞாபக மறதியை தவிர்க்க நல்ல மருந்து முழுமையான கவனம்தாங்க.நேரம் நிர்வகித்தலும்,திட்டமிடலும்,அதனை சரியாக பயன்படுத்துதலும்தாங்க நமது குறிக்கோளை உயர்வுக்கு அழைத்து செல்லும்.
  சமூக நலனில் அக்கறையுள்ள
  உங்கள் ஓட்டுனர் 
     பரமேஸ்வரன்.C,
  தாளவாடி-
   ஈரோடு மாவட்டம்.    http://konguthendral.blogspot.com
     

இளையோர் வாழ்வை மேம்படுத்த

மரியாதைக்குரியவர்களே,வணக்கம்.
          ''இளைய சமுதாயம்'' வலைப்பக்கத்திற்கு தங்களை இனிதே வரவேற்கிறேன். மற்றவர்கள் நம்மை மதிப்பதற்குமுன் நம்மை நாமே மதிக்ககற்றுக்கொள்ளு வேண்டும்.இந்த சுய மதிப்புத்தான் நமது தன்னம்பிக்கைக்கு அடிப்படையாகும்.
 நம்மைப்பற்றிய மதிப்பீடு மிக முக்கியம். அதாவது நாம் நம்மைப்பற்றி மதிப்பீடு செய்வது.அடுத்து பெற்றோரும் உறவினர்களும் நம்மைப்பற்றி மதிப்பீடு செய்வது.அடுத்து ஆசிரியர்கள் நம்மைப்பற்றி மதிப்பீடு செய்வது.அடுத்து நண்பர்களும் நண்பர்களல்லாத மற்றவர்களும் நம்மை ப்பற்றி மதிப்பீடு செய்வது.இவை போன்ற மதிப்பீடுகளால் நமக்கு புதுக்கோணமும்,தெளிவான எண்ணமும்,எளிய செயல்முறைகளும் தானே உண்டாகும்.
  களைப்புறுதல்,அச்சம்,மனக்கவலை,ஏக்கம், இவை போன்ற எண்ணங்களை விடுத்து நம்பிக்கை,விடாமுயற்சி,நல்ல எண்ணங்கள்,நேர்மறை சிந்தனைகள் போன்றவைகளை நமக்குள் தக்க வைத்துக்கொள்ள வேண்டும்.
  இன்றைய கால கட்டத்தில் எல்லாத்துறைகளும் ஒன்றுடன் ஒன்று மறைமுகமாக தொடர்பு கொண்டுள்ளன.எனவே,புத்தக அறிவை மட்டும் வைத்துக்கொண்டு வேலையில் ஈடுபட முடியாது.புத்தகத்தை மட்டும் படித்துவிட்டு நீச்சல் அடிக்கவோ,வாகனம் ஓட்டவோ முடியாது.(மிதிவண்டியாக இருந்தாலும் சரி.)
  கண்டிப்பாக அனுபவமும் பயிற்சியும் நுட்பமான உத்தியும்தான்  தேவை.பெரிய,பெரிய செயல்கள் எல்லாம் திறமையினால் நிறைவேறிட வில்லைங்க.விடாமுயற்சியினால்தான் நிறைவேறி உள்ளன.
என்றும் சமூக நலனில் அக்கறையுள்ள
  உங்கள் ஓட்டுனர்,
பரமேஸ்வரன்.C
  தாளவாடி-ஈரோடு மாவட்டம். http://konguthendral.blogspot.com

இளையோருக்கு தகவல் தொடர்பு திறன் மிக அவசியம்

மரியாதைக்குரியவர்களே,
                               வணக்கம்.
                              ''இளைய   சமுதாயம்'' வலைப்பக்கத்திற்கு தங்களை இனிதே வரவேற்கிறேன்.
              வெவ்வேறு மொழிகளில்,தகவல் தொடர்புத்திறன் அவசியம் தேவைப்படுகிறது.அவ்வாறு வெவ்வேறு மொழிகளில் நமக்கு நல்ல திறமை இருக்கிறது என்ற நம்பிக்கை இருந்தால்தான் யாரையும் எதிர்பார்க்காமல் வாழ்க்கையில் எத்தகைய துணிச்சலான முடிவையும் எடுக்க முடியும்.அத்தில் வெற்றி பெற முடியும்.
நமது மாநில இளைஞர்களைப்பொறுத்தவரை ஆங்கிலத்திலும்,தமிழிலும் சிறப்பான தகவல் தொடர்புத்திறன் தேவைப்படுகிறது. போட்டி மிகுந்த இன்றைய உலகில் தகவல் தொடர்புத்திறன் அவசியம்.தற்போதைய உலகில் திறமைக்கு மட்டுமே முதலிடம் கிடைக்கும் என்ற நிலை ஏற்பட்டுள்ளது.அதனால் ஒவ்வொருவரும் தங்களது தகவல் தொடர்புத்திறனை மேம்படுத்திக்கொள்வது அவசியமாகிவிட்டது. உடனடி வேலைவாய்ப்புக்கான உத்தரவுகள் வழங்கப்படும் வேலைவாய்ப்பு மேளாக்களில் ஆப்டிடியூட் தேர்வும்,நேர்முகத்தேர்வும்தான் அடிப்படையாகும்.
         நேர்முகத்தேர்வானது ஆங்கிலத்தில்தான் நடத்தப்படுகிறது.ஆங்கிலத்தில் தகவல்தொடர்புத்திறன் என்பது கொஞ்சம் கடுமையான சோதனைதான்.ஆனால் இவற்றில் தேர்வு செய்யப்பட்டு வேலை பெறுபவர்களை கொஞ்சம் நுணுக்கமாக கவனித்தால் அவர்களிடம் அடிப்படை ஆங்கிலத்திறன் ஓரளவு இருப்பதை தவிர வேறு எந்தவோரு அளவிலும் மொழித்திறன் இருப்பதில்லை என்பது புரியும்.அடிப்படை ஆங்கிலத்திறன் என்பது தவறில்லாமல் வரிகளை எழுத,பேச முடிவதுதான்.மற்றவர்கள் பேசுவதை புரிந்துகொள்ளவும் வேண்டும்.
  அதைப்பெற என்ன வழி?ஆங்கில வார்த்தைகளை புதிது புதிதாக அறிந்துகொள்வது. அவற்றை வரிகளில் பயன்படுத்திப்பார்ப்பது..சொற்றொடர்களை  அறிந்து பயன்படுத்துவது. அடிப்படை ஆங்கில இலக்கணத்தில் போதிய திறன் பெற்று இருப்பது. இவை இருந்தாலே போதும்.ஆங்கிலத்தில் படிப்பதை வழக்கமாக்கிக்கொள்ள வேண்டும்.அடிக்கடி ஆங்கில உரையாடல்களை கேட்டு ஆங்கிலத்தோடு நல்ல பழக்கத்தை ஏற்படுத்திக்கொள்ள வேண்டும்.தொலைக்காட்சி,வானொலி போன்ற ஊடகங்களில் செய்திகளை கேட்டு பழகிக்கொள்ள வேண்டும்.ஆங்கிலத்தில் எழுதிப்பார்த்து தற்போதைய தரத்தை மதிப்பீடு செய்து கொள்ள வேண்டும்.அதற்காக ஆங்கிலத்தில் தினசரி ஏதாவது ஒரு தலைப்பில் ஒன்று அல்லது இரண்டு பத்திகள் எழுதிப்பார்த்து அதிலுள்ள தவறுகளை சரிபடுத்தி பார்த்துக்கொள்ள வேண்டும்.
             என 
          அன்பன்
   பரமேஸ்வரன் சி
       ( ஓட்டுனர்)                         http://konguthendral.blogspot.com
  தாளவாடி-ஈரோடு மாவட்டம். 

இளைய சமுதாயம்

 மரியாதைக்குரியவர்களே,
           வணக்கம்.''இளைய சமுதாயம்'' வலைப்பதிவுக்கு தங்களை இனிதே வரவேற்கிறேன்.இந்த வலைப்பக்கத்தில் இனி வரும் காலங்களில்  இன்றைய இளைய சமுதாயத்தின்-குடும்ப உறவுகள்,மனித உறவுகள், கலாச்சார நுகர்வுகள் கண்காணிப்பு,ஆலோசனைகள்,வாழ்க்கை முன்னேற்றத்திற்கான வழிகாட்டல்,தன்னம்பிக்கையூட்டல்,வாழ்க்கையின் அவசியத்தை உணர வைத்தல்,முக்கியமாக போதை பொருட்களிலிருந்து மீட்டெடுத்தல்,மன அழுத்தத்திலிருந்து மீட்டெடுத்தல்,வாசிப்புத்திறனை ஆர்வப்படுத்துதல், உயர்கல்விக்கான ஆலோசனைகள்,பொருளாதாரத்திற்கான,வருமானத்திற்கான,தொழில் மற்றும் பணி வாய்ப்புகளை உருவாக்கிக்கொடுத்தல்,தமிழ்பண்பாடுகளை பேணி காத்தல்,உறவுமுறைகளை நேசித்தல்,தன்னொழுக்கம் பேணல்,வெளி உலகை புரியவைத்தல்,சூழ்நிலைக்கேற்ப தன்வாழ்க்கையை செம்மைப்படுத்துதல்,உடலையும்,உள்ளத்தையும் உறுதி செய்தல், போன்ற பல நல்ல வழிகாட்டுதல்களை பதிவிடுதலே முக்கிய நோக்கமாக கொண்டு இந்த வலைப்பக்கத்தை உருவாக்கி உள்ளோம்.கேள்வி _பதில்களாகவும் பதிவிட உள்ளேன்..இளைய சமுதாயத்தின் மனதில் என்ன உள்ளது?இளைய சமுதாயம் என்ன எதிர்பார்க்கிறது?இன்றைய இளைய சமுதாயத்திற்கு என்ன தேவை?என்பதை கண்டறிந்து அதற்கேற்ப அவர்களை சீர்படுத்துதலே குறிக்கோளாகும்.
    என 
    சமூக நலனில் அக்கறையுள்ள
       உங்கள் ஓட்டுனர்,
          பரமேஸ்வரன்.சி.     
       http://konguthendral.blogspot.com